தர்மபுரி மாவட்டம் அப்பனஅள்ளி கோம்பையில் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று ரேஷன் கடை அமைக்கப்பட்டது. ஆனால் இந்த ரேஷன் கடைக்கு மின்வசதி ஏற்படுத்தி தரவில்லை. இதனால் பயோமெட்ரிக் கருவிகளை இயக்குவதிலும், பொருட்களை பாதுகாப்பாக வைப்பதிலும் சிரமம் ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் விரைந்து ரேஷன் கடைக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.