பந்தலூர் அருகே உள்ள மேங்கோரேஞ்ச் பகுதியானது தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வசிக்கும் பகுதி ஆகும். இங்கு காட்டுயானைகள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் காணப்படுகிறது. அதே நேரத்தில் அந்த பகுதியில் உள்ள தெருவிளக்குகள் பழுதடைந்து ஒளிராமல் கிடக்கின்றன. இதனால் அங்கு வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிக்கும் அபாயம் காணப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே தெருவிளக்குகளை பழுது நீக்கி மீண்டும் ஒளிர வைக்க வேண்டும்.