பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பஸ் நிறுத்தம் அருகே அரியலூர் - பெரம்பலூர் சாலையில் அமைக்கப்பட்டிருந்த உயர் கோபுர மின்விளக்கு சில காரணங்களால் அகற்றப்பட்டது. இதனால் இரவு நேரங்களில் இப்பகுதி இருளில் மூழ்கிப் போவதால், பொதுமக்கள் மற்றும் பயணிகள் இப்பகுதியில் நடமாட அச்சப்பட்டு வருகின்றனர். எனவே, அகற்றப்பட்ட உயர் கோபுர மின்விளக்கை மீண்டும் அதே இடத்தில் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.