சேலம்-நாமக்கல் நெடுஞ்சாலையில் தாசநாயக்கன்பட்டி, பனமரத்துப்பட்டி பிரிவு, சந்தியூர் பிரிவு, மல்லூர் பிரிவு ஆகிய நான்கு இடங்களில் மேம்பாலங்கள் உள்ளன. அதன் இருபுறமும் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளது. ஆனால் இரவு நேரங்களில் அதன் வெளிச்சம் பாலத்தின் கீழ் உள்ள சாலை சந்திப்புகளில் தெரிவதில்லை. இதனால் அங்கு இருள் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அச்சப்படுகின்றனர். சமீபத்தில் சந்தியூர் பிரிவில் உள்ள பாலத்தின் கீழ் இரவில் நடந்து சென்ற மூதாட்டியிடம் தங்கசங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச்சென்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி 4 பாலங்களின் கீழ் உள்ள சாலையில் மின் விளக்குகள் அமைத்து கேமரா பொருத்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.