மின்விளக்குகள் ஒளிருமா ?

Update: 2026-07-12 15:27 GMT

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் திருவிடைமருதூர் அருகே புத்தகரம் ஊராட்சி முருக்கன்குடி முதல் நெடார் வரை 1 கிலோமீட்டர் பிரதான சாலை உள்ளது. இந்த சாலையில் மின்கம்பங்கள் இருந்தும் மின்விளக்குகள் சரியாக எரிவது இல்லை. அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் முக்கிய சாலை என்பதால் இருளில் சூழ்ந்து கிடக்கிறது. இரவில் விஷசந்துக்களால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். முருக்கன் குடி முதல் நெடார் வரை உள்ள சாலை மின் கம்பத்தில் மின்விளக்குகள் ஒளிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், முருக்கன்குடி.

மேலும் செய்திகள்