அரக்கோணம் நாகாலம்மன் நகர் பகுதி மூகாம்பிகை நகர் அருகே மின் ஒயர்களை உரசியபடி கேபிள் ஒயர்கள் இருப்பதால் பலத்த காற்று, மழை அல்லது ஒயர்கள் அறுந்து விழுந்தால் மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அசம்பாவிதம் நடக்கும் முன் சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிகள், கேபிள் டி.வி. நிறுவன நிர்வாகிகள் மின் ஒயர்களை உரசியபடி உள்ள கேபிள் ஒயர்களை உடனடியாக அகற்றி பாதுகாப்பு விதிமுறைகளுக்கு ஏற்ப சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுதாகர், அரக்கோணம்.