‘தினத்தந்தி’க்கு பாராட்டு

Update: 2026-03-01 14:42 GMT

ஓமலூர் வட்டம் புளியம்பட்டியில் மின்கம்பிகள் தாழ்வாக செல்வதாக ‘தினத்தந்தி’யில் செய்தி பிரசுரிக்கப்பட்டது. இதையடுத்து அதன் எதிரொலியாக அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மின்வாரிய ஊழியர்கள் மூலம் மின்கம்பிகள் தாழ்வாக செல்லாமல் சரி செய்தனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட உதவிய ‘தினத்தந்தி’க்கும் பொதுமக்கள் பாராட்டி நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்