சென்னை கிண்டி, மடுவின்கரை பிள்ளையார் கோவில் தெருவில் சாலை ஓரத்தில் உள்ள மின் இணைப்பு பெட்டி மிகவும் ஆபத்தான வகையில் திறந்த நிலையில் கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே கடந்து செல்லும் நிலை உள்ளது. மேலும், குழந்தைகள் அதிகம் விளையாடும் பகுதி என்பதால் அசம்பாவித சம்பவம் நடைபெறுவதற்கு முன்பு மின்வாரிய துறை அதிகாரிகள் புதிய மின் இணைப்பு பெட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.