தெரு விளக்குகள் எரியுமா?

Update: 2026-01-18 11:35 GMT


தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் தலையாரி தெரு அருகில் ஆஸ்பத்திரி சாலையில் தெருவிளக்குகள் எரிவதில்லை.இதனால் இந்த பகுதி இருட்டாக உள்ளது. அருகில் பள்ளிக்கூடங்கள் உள்ளது. இதனால் இரவில் பள்ளி மாணவ-மாணவிகள் டியூசன் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் இருள் சூழ்ந்து உள்ளதால் திருடர்கள் அச்சம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரு விளக்குகள் எரிவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், பட்டுக் கோட்டை

மேலும் செய்திகள்