அரக்கோணம்-சோளிங்கர் ரோடு, திருத்தணி ரோடுகளில் உள்ள மேம்பாலங்களில் மின் விளக்குகள் இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவில் வேகமாகச் செல்லும் வாகனங்களால் விபத்துகள் ஏற்படுகின்றன. டியூசன் முடித்து வீட்டுக்கு செல்லும் மாணவ-மாணவிகள், ேவலை முடிந்து வீட்டுக்கு செல்லும் பெண்கள் மேம்பாலங்கள் வழியாக செல்ல அச்சப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேம்பாலங்களில் மின் விளக்குகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுந்தரம், கும்பினிபேட்டை, அரக்கோணம்.