ஆட்டையாம்பட்டி அருகே ராஜபாளையம் ஊராட்சிக்குட்பட்ட கடுக்கட்டான்பாளையம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அப்பகுதியில் உள்ள 3 தெருவிளக்குகள் பழுதாகி கடந்த 2 மாதங்களாக எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மேலும் ஆடு, கோழி திருடு போகின்றன. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதான தெருவிளக்குகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.