குஜிலியம்பாறை தாலுகா பாளையம் பகுதியில் உள்ள திண்டுக்கல்-கரூர் சாலை, நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட்டது. சாலை விரிவாக்க பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகிறது. ஆனாலும் விரிவாக்க பணியின்போது சாலையின் நடுவே இருந்த மின்கம்பங்கள் சாலையோரத்துக்கு மாற்றப்படவில்லை. இதனால் நான்குவழிச் சாலையின் நடுவே போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பங்கள் உள்ளன. அவற்றை விரைந்து அகற்ற வேண்டும்.