சரவணம்பட்டி அருகே விசுவாசபுரம் சத்தி சாலை மற்றும் கீரணத்தம் ஐ.டி. பார்க் சாலை ஆகிய இடங்களில் போதிய தெருவிளக்குகள் இல்லை. பல இடங்களில் தெருவிளக்குகள் பழுதாகி ஒளிராமல் கிடக்கின்றன. இதனால் அந்த பகுதிகள் இரவில் இருள் சூழ்ந்து கிடக்கின்றன. இதன் காரணமாக அந்த வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். இருட்டை பயன்படுத்தி வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே அங்கு போதிய தெருவிளக்குகள் பொருத்தவும், ஒளிராத தெருவிளக்குகளை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.