தடுப்பு அமைக்கப்படுமா?

Update: 2026-01-18 10:37 GMT

சென்னை அமைந்தகரை, கான்வெண்ட் தெருவில் சாலை ஓரத்தில் மின்மாற்றி ஒன்று உள்ளது. இந்த மின்மாற்றியை சுற்றிலும் தடுப்புகள் இல்லாமல் மிகவும் ஆபத்தான முறையில் இருக்கிறது. இதன் அருகில் சிறுவர்கள் பலரும் சென்று விளையாடுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சாலை ஓரத்தில் இருப்பதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே கடந்து செல்லும் நிலை உருவாகியுள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் மின்மாற்றியை சுற்றிலும் தடுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்