காவேரிப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட கொண்டாபுரம் பகுதியில் உள்ள வாசுகி நகரில் 50 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு குடியிருப்ப வர்கள் குடிநீர் தேவைக்கு கேன் வாட்டர் பயன்படுத்தும் நிலை உள்ளது. குடிநீர் இணைப்பு வேண்டி பேரூராட்சி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வெயில் சுட்டெரிக்கிறது. தண்ணீர் தேவை அதிகமாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவார்களா?
-எம்.மோகன், காவேரிப்பாக்கம்