கூடலூர் 1-ம் மைல் புரமணவயல் பகுதியில் சாலையோரத்தில் குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. அதில் இருந்து குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. கோடைகாலம் நெருங்கி வரும் சமயத்தில் இதுபோன்று குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே அந்த குடிநீர் குழாயை உடனடியாக சீரமைக்கவும், அனைத்து குடிநீர் குழாய்களையும் முறையாக பராமரிக்கவும் அதிகாரிகள் முன்வர வேண்டும்.