சேதமடைந்த குடிநீ்ர் தொட்டி

Update: 2026-06-07 13:04 GMT


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரம் அம்பேத்கர் தெருவில் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைந்துள்ளது .இந்த தொட்டியில் இருந்து தான் இந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் குடிநீர் தொட்டி சேதமடைந்து ஆபத்தான நிலையில் மோசமாக உள்ளது. தொட்டிக்கு கீழ்பகுதியில் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த குடிநீர் தொட்டியை சீரமைத்து, குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், மன்னார்குடி

மேலும் செய்திகள்