ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் ரெயில்வே கேட் அருகே குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதிக்கு தண்ணீர் வினியோகம் செய்யும் போது பெருமளவு குடிநீர் வீணாக சாலையில் ஓடுகிறது. மேலும் குழாய் உடைந்த இடத்தில் சாலையில் தண்ணீர் தேங்கி குண்டும், குழியுமாக மாறியுள்ளது. எனவே குழாய் உடைப்பை விரைந்து சரிசெய்ய வேண்டும்.