சாலையில் ஓடும் குடிநீர்

Update: 2026-09-13 17:00 GMT

சேந்தமங்கலம் ஒன்றியம் வாழவந்திகோம்பை ஊராட்சியில் ஆச்சாவடி பகுதியில் இருந்து கண்டாங்கி கிராமம் வழியாக ராமநாதபுரம்புதூர் பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் பஸ் நிறுத்தம் அருகே சில நாட்களுக்கு முன்பாக அந்த குழாய் உடைந்து பழுது ஏற்பட்டதால் குடிநீர் வெளியேறி வீணாகி வருகிறது. அந்த நீர் அங்குள்ள சாலையில் ஆறாக ஓடுவதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே குடிநீரின் அவசியத்தை கருத்தில் கொண்டு உடைந்த குழாயை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்