தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் சுண்ணாம்பு கார தெருவில் இருந்து உத்தண்டி குளம் செல்லும் வழியில் ஆற்று பாலம் உள்ளது. இந்த பாலத்தின் மீது உள்ள குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குழாய் உடைந்து பல நாட்களாக குடிநீர் வீணாகிறது. தொடர்ந்து அந்த பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்பதால், அது சாக்கடையாக மாறி துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், பட்டுக்கோட்டை.