சாணார்பட்டி ஒன்றியம் மடூர், மணியகாரன்பட்டியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்து உள்ளது. அதோடு சிமெண்டு பூச்சுகளும் பெயர்ந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் குடிநீர் தொட்டி எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த குடிநீர் தொட்டியை விரைந்து சீரமைக்க வேண்டும்.