திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட ரெட்டியார் கார்டன் பகுதியில் உள்ள சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. மேலும் ஆங்காங்கே பள்ளங்கள் அதிகமாக உள்ளன. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் சாலையில் குளம்போல தேங்கி நிற்கின்றன. சாலையில் செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.