தியாகதுருகம் அய்யப்பன்கோவில் அருகே உள்ள கோட்டகுளத்தில் செடி, கொடிகள் அதிக அளவில் வளர்ந்து தூர்ந்து போய் காணப்படுகிறது. இதனால் மழைநீரை சேமித்து வைக்க முடியாத நிலை உள்ளது. எனவே நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க குளத்தை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.