சுகாதார சீர்கேடு

Update: 2026-09-06 13:44 GMT

பொள்ளாச்சி அருகே அம்பராம்பாளையம் ஆழியாற்றில் முக்கிய நாட்களில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க வெளியூரை சேர்ந்த பலரும் வந்து செல்கின்றனர். அவர்கள் துணிகள், பூக்கள் உள்ளிட்டவற்றை அங்கேயே வீசிச்செல்வதால் குப்பைக்கூளமாக காட்சியளிக்கிறது. மேலும் கழிப்பிட வசதி எதுவும் இல்லாததால் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலை உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. எனவே இந்த பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் உரிய தீர்வு காண வேண்டும்.

மேலும் செய்திகள்