தண்ணீர் பிரச்சினை

Update: 2026-09-06 13:35 GMT

ஓசூர் மாநகராட்சி 6-வது வார்டுக்குட்பட்ட என்.ஜி.ஜி.ஓ. காலனியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் மாநகராட்சி சார்பில் 10-15 நாட்களுக்கு ஒருமுறைதான் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. குறிப்பாக 3-வது கிராஸ் பகுதிக்கு திறந்துவிடப்படும் தண்ணீர் குறுகிய நேரத்திற்குள்ளாகவே நின்றுவிடுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் தண்ணீரை பணம் கொடுத்து டிராக்டர் மூலம் வாங்கி பயன்படுத்தும் அவலநிலை இருந்து வருகிறது. தண்ணீர் பிரச்சினையால் இப்பகுதி மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே மாநகராட்சி நிர்வாகம் சீராகவும், குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு இருமுறையாவது தண்ணீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்