தண்ணீர் பற்றாக்குறை

Update: 2026-09-06 15:12 GMT

நாமக்கல் மாவட்டம் என்.புதுப்பட்டி ஊராட்சி மேலப்பட்டி கிராமத்தில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்களுக்கு கடும் வறட்சி காரணமாக தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் பழைய ஊர் பொது கிணற்றில் இருந்து பெண்கள் தண்ணீர் எடுத்து செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து மேலப்பட்டி கிராம மக்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்