சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா கீழசூரணம் கிராமத்தில் அமைந்துள்ள ஆழ்துளை இரும்பு குழாய் சேதமடைந்து துருப்பிடித்து மோசமான நிலையில் காணப்படுகிறது. இதனால் தண்ணீர் எடுக்க முடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமமடைகின்றனர். மேலும் தண்ணீர் துரு கலந்து வருவதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே சேதமடைந்து கிடக்கும் அடிபம்பு குழாயை சீரமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?