வேலூர் காகிதப்பட்டரை எல்.ஐ.சி. காலனி பகுதியில் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வீட்டு குழாய்களில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அந்தக் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த நிலை கடந்த மூன்று மாதங்களாக தொடர்கிறது. வேலூர் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து தூய்மையான மற்றும் சுகாதார முறையில் குடிநீர் வினியோகம் செய்யுமா?
-அ. அன்பழகன், வேலூர்.