திசையன்விளை போலீஸ் நிலையம் அருகிலும், காமராஜர் சிலை அருகிலும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே குழாய் உடைப்பை சீரமைத்து சீராக குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.