ஆலந்தளிர் கிராமத்தில் அமைந்துள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் இடிந்து விழுந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும் .