கலசபாக்கம் ஒன்றியம் காந்தபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சீனந்தல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி புதிதாக கட்டப்பட்டது. ஆனால் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றுவதற்கான குழாய்கள் அமைக்கப்படாமல் உள்ளது. தற்போது கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-முருகேசன், காந்தபாளையம்.