காட்பாடியை அடுத்த பள்ளிக்குப்பம் கிராமத்தில் மலை அடிவாரத்தில் தனலட்சுமி நகர் பகுதியில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். எங்கள் பகுதியில் 20 ஆண்டுகளாக தண்ணீர் வசதி இல்லை. நாங்கள் பல கிலோ மீட்டர் தூரம் சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டிய சூழ்நிலை உள்ளது. தண்ணீருக்காக முதியவர்களும், குழந்தைகளும் பல கிலோ மீட்டர் தூரம் செல்வதால் அவதிப்படுகின்றனர். எங்கள் கிராமத்தில் தண்ணீர் வசதி வேண்டி பல முறை அதிகாரிகளிடம் எடுத்துக்கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது எங்கள் பகுதிக்கு தண்ணீர் வசதி கிடைக்க வழி வகை செய்வார்களா?
-விஜயகுமார், பள்ளிக்குப்பம்.