திருச்செந்தூர் தாலுகா உடன்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இலங்கநாதபுரம் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் தூண்களில் காங்கிரீட் பெயர்ந்து இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. அதில் உள்ள இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றது. அதனருகே வீடுகள் இருப்பதால் விபரீதம் ஏற்படும் முன்பாக குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும் அல்லது புதிய குடிநீர் தொட்டி கட்டுமாறு வேண்டுகிறேன்.