கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலத்திற்கு அடியில் செல்லும் சர்வீஸ் சாலையில் லேசான மழை பெய்தால் கூட தண்ணீர் தேங்குகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் தத்தளித்தபடி செல்கின்றனர். சிலர் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சர்வீஸ் சாலையில் மழைநீர் தேங்குவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.