தண்ணீர் பற்றாக்குறை

Update: 2026-10-25 15:07 GMT

பங்களாப்புதூரில் கடந்த 1 மாதத்துக்கு முன்பு 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த பகுதி பொதுமக்களுக்கு மின்மோட்டார் மூலம் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு வருகிறது. ஆனால் இருமுனை மின்சாரம் என்பதால் தொட்டி முழுவதுமாக நிரம்புவதில்லை. இதனால் பொதுமக்களுக்கு போதுமான தண்ணீர் வழங்க முடியாமல் பற்றாக்குறை நிலவுகிறது. இதை போக்க 24 மணி நேரமும் மின்சாரம் வினியோகிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்