திட்டக்குடி அடுத்த கூடலூர் பகுதியில் ஆழ்துளை கிணறு மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்றப்பட்டு, அங்கிருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது. சில சமயங்களில் மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு தண்ணீரை ஏற்றி நிரம்பிய பின்னரும், ஊராட்சி பணியாளர்கள் மோட்டாரை நிறுத்தாமல் கவனக்குறைவாக இருந்து வருகின்றனர். இதனால் பல மணி நேரமாக தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. ஏற்கனவே அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில் ஊராட்சி நிர்வாகம் அலட்சியமாக செயல்படுவதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.