நெல்லை மாவட்டம் ராதாபுரம் போலீஸ் நிலையம் முன்பு சாலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக பள்ளம் தோண்டிய போது குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் பீறிட்டு வெளியேறியது. இதனால் ராதாபுரம் சுற்றியுள்ள பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. எனவே குழாய் உடைப்பை சரிசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.