வேலூரை அடுத்த அப்துல்லாபுரம் அருகில் தெள்ளூர் சாலை பகுதியில் அணைக்கட்டு தாலுகாவுக்கு உள்பட்ட சூர்யா நகர், குபேரன் நகர், சிவராஜ் நகர், குமரன் நகர் வடக்கு மேடு உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்கு கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக காவிரி கூட்டுக்குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லை. அங்கு கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சண்முகம், அப்துல்லாபுரம்.