பல்லடத்தை அடுத்த பணிக்கம்பட்டி ஊராட்சி சின்னிய கவுண்டம்பாளையம் அரசு பள்ளி அருகில் மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. இந்த குடிநீர் தொட்டி பழுதடைந்து, இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே குடிநீர் தொட்டியை இடித்து விட்டு, புதிய தொட்டி கட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.