ஒடுகத்தூர் அருகே சேர்பாடி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. அப்பகுதி மக்களின் முக்கிய குடிநீர் பிரச்சினையை தீர்க்க 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்தத் தொட்டி பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. தொட்டியின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரிகிறது. அந்தத் தொட்டி எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் தொட்டியை இடித்து விட்டு அதே இடத்தில் புதிய குடிநீர் தொட்டி அமைத்துத்தர வேண்டும்.
-பாண்டியன், சேர்பாடி.