கோவை செல்வபுரம் சரோஜினி நகர் 2-வது வீதியில் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த குழாய்களில் குடிநீர் கசிந்து வீணாகி வருகிறது. பல வீடுகளில் இந்த நிலை நீடிப்பதால், பொதுமக்கள் வேதனை அடைந்து வருகின்றனர். ஏற்கனவே பருவமழை பொய்த்து போனதால் அணைகளில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இந்த சூழலில் குடிநீர் வீணாவது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே குடிநீர் வீணாவதை தடுக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.