ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் பனைக்குளம் மேற்கு பஸ் நிலையம் அருகில் புகழ் ஊரணி எதிரே உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி பயன்பாடின்றி பல மாதங்களாக பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அவ்வழியே கடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்துடனேயே கடந்து செல்கின்றனர். இதனால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் அதிகளவில் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த நீர்த்தேக்க தொட்டியை அப்புறப்படுத்த அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.