பண்ருட்டி அடுத்த வரிஞ்சிப்பாக்கம் கிராமத்தில் 3 கைப்பம்புகள் உள்ளன. இவை பழுதடைந்து சுமார் 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் சரிசெய்யப்படவில்லை. இதனால் அப்பகுதியில் தண்ணீர் பிடிக்க வெகுதூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளதாக அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். மேலும் இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.