குடிநீர் தொட்டியின் மின்மோட்டார் பழுது

Update: 2026-11-01 19:08 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலேரி ஊராட்சியில் அரசங்குப்பம் அருந்ததிபாளையம் உள்ளது. இங்கு சுமார் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. அந்த மக்களுக்காக ஆழ்துளை கிணறு அமைத்து மின்மோட்டார் பொருத்தி, மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டி முடிக்கப்பட்டு, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. திடீரென ஆழ்துளை கிணற்றின் மின் மோட்டார் பழுதடைந்து விட்டது. இதனால் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி பயன்பாடு இன்றி உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கிருஷ்ணமூர்த்தி, அரசங்குப்பம். 

மேலும் செய்திகள்