கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு ஊராட்சியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு படவேடு ஊராட்சி மன்றம் சார்பில் மல்லிகாபுரம், கமண்டலாபுரம் ஆகிய கிராம பொதுமக்களின் குடிநீர் பயன்பாட்டுக்காக கமண்டல நதிக்கரை ஓரம் குடிநீர் கிணறு தோண்டப்பட்டது. அந்த குடிநீர் கிணறு பயன்பாட்டில் இல்லாததால் பாழடைந்துள்ளது. அந்தக் கிணற்றை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர படவேடு ஊராட்சி மன்றம் நடவடிக்கை எடுக்குமா?
-ரமேஷ், கண்ணமங்கலம்.