குழாயில் உடைப்பு

Update: 2026-11-01 14:18 GMT

கோவை மாநகராட்சி 25-வது வார்டு காவலர் குடியிருப்பு ரோடு எப்.சி.ஐ. காலனி பகுதியில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 10 நாட்களாக குடிநீர் சாலையில் வீணாக வழிந்தோடி வருகிறது. இதன் காரணமாக சாலையும் சேதம் அடைந்து உள்ளது. அங்குள்ள சாலையில் குழி ஏற்பட்டு உள்ளதோடு அதில் குடிநீரும் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே குடிநீர் குழாய் உடைப்பை உடனடியாக சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்