குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்படுமா?

Update: 2026-11-01 14:51 GMT

கரூர் மாவட்டம் தோரணக்கல்பட்டி நேரு நகர் அடுக்குமாடி குடியிருப்பில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக நான்கு இடங்களில் தலா 300 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இவை அமைக்கப்பட்டு 6 மாதங்களுக்கு மேலாகியும், நீர்ர்தேக்கத் தொட்டியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தண்ணீர் அவற்றுக்கு திறந்துவிடப்படவில்லை. இதனால் குடியிருப்புவாசிகள் உப்புத்தன்மை கொண்ட தண்ணீரைப் பயன்படுத்துவதுடன், குடிநீரை விலை கொடுத்து வாங்கும் நிலை உள்ளது. எனவே குடிநீர் தொட்டிகளுக்கு தண்ணீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்