போளூர் தாலுகா முடையூர் அருகில் உள்ள ஊத்தூர் ஊராட்சியில் ரூ.10¾ லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டி முடிக்கப்பட்டு சுமார் ஒரு ஆண்டு காலமாக பயன்பாட்டுக்கு வரவில்லை. 6 மாத காலமாக ஊத்தூர் ஊராட்சியில் தண்ணீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று குடிநீர் எடுத்து வருகின்றனர். பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ஊத்தூர் ஊராட்சியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.
-சசிகுமார், ஊத்தூர்.