பந்தலூர் அருகே குழிக்கடவில் இருந்து அய்யன்கொல்லி பஜார் செல்லும் வழியில் மழைநீர் வடிகால் செல்கிறது. இந்த வடிகால் உடைந்து கிடக்கிறது. இதனால் மழைநீர் வழிந்ேதாட முடியாமல் தேங்கி நிற்கிறது. அதில் கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது. அத்துடன் கனமழை பெய்யும் சமயங்களில் தண்ணீர் வடிகாலில் செல்லாமல் சாலையில் தேங்குகிறது. இதனால் வாகன ஓட்டிகள் உள்பட அனைத்து துறையினரும் சிரமப்படுகின்றனர். எனவே அந்த வடிகாலை சீரமைக்க வேண்டும்.