சேதமடைந்த கைப்பம்பு

Update: 2026-10-18 11:35 GMT
ரிஷிவந்தியம் அருகே பாக்கம் புதூரில் உள்ள மயான சாலை அருகே ஊராட்சி சார்பில் கைப்பம்பு அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது கைப்பம்பானது சேதமடைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் தண்ணீர் பிடிக்க வெகுதூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளதாக அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். மேலும் இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்